Categories
உலக செய்திகள்

சார்லஸ் எப்படி சிறந்த மன்னராக இருக்க முடியும்….? கேள்வி எழுப்பும் இளைஞர்கள்…!!!!!!

இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட இளவரசர் சார்லஸ் தான் ராஜ குடும்பத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதி வருகின்றார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விஷயங்களில் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது நம்பிக்கை இல்லை என தீ டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

ராஜ குடும்ப உறுப்பினர்களில் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ போன்றவரால் உருவாகியுள்ள பிரச்சனைகள் காலப்போக்கில் மறைந்து போய்விடும். ஆனால் ராஜ குடும்பத்திற்கு உண்மையாக பிரச்சனை ஏற்படுமானால் அது ராஜ குடும்ப வாரிசான அதாவது அடுத்து மன்னராக போகும் இளவரசர் சார்லசால்  தான் இருக்கும் என கூறுகிறார் ராஜ குடும்ப நிபுணரான லிப்பி பர்வேஸ்.

இளவரசர் சார்லஸ் தனது தொண்டு நிறுவனத்திற்கு தீவிரவாதி ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மில்லியன் பவுண்டுகள் நன்கொடை பெற்ற விஷயம் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது நினைவிருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் ராஜ குடும்பத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என கூறும் ராஜ குடும்ப நிபுணரான லிப்பி பர்வேஸ் விரைவில் மகாராணி பதவி  காலம் முடிவடை இருக்கின்ற நிலையில் இப்படிப்பட்ட சார்லஸ் எப்படி ஒரு சிறந்த மன்னராக இருக்க முடியும் என இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |