சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர்.
இதனையடுத்து சூதாடிய குற்றத்திற்காக லட்சுமணன், ராமச்சந்திரன், கணேசன், காந்தி, ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.