மழைவெள்ளத்தை பார்வையிட வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் புதுமண தம்பதியர் வாழ்த்து பெற்றனர்..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீடுகளுக்குள்ளும் செல்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து, நிவாரண உதவிகளை செய்து வருகிறார்..
இந்தநிலையில் 2ஆவது நாளாக இன்றும் வெள்ள நீரில் நடந்து சென்று ஆய்வு பணியை மேற்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. இதற்கிடையே இன்று பெரம்பூரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, இன்று திருமணமான புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்..
'மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
இன்று (08-11-2021) சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர்'#CMMKStalin #DMK pic.twitter.com/iYQvok57lz— Shanmughavalli.v (@Shanmughavalli3) November 8, 2021