பிரபல நாட்டில் அதிக அளவில் நூதன மோசடி நடைபெற்று வருகிறது.
கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை saja khilani என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பையன் தான் டெக்சியில் வந்ததாகவும், டெக்சி சாரதி கட்டணத்தைத் தொகையை பணமாக பெற மறுப்பதாகவும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே தொகையை பெறுவேன் என கூறிவிட்டதாகவும், தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லை பணம் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் saja டெக்சிக்கு கட்டணம் செலுத்தினால் தான் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஐயோ பாவம் அந்த பையன் என்று எண்ணிய saja இப்படி ஒரு நிலைமையில் நான் இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே அவனுக்கு உதவுவது எனவும் முடிவு செய்துள்ளார். ஆனாலும் அவருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
முதலில் அந்த டெக்சி சாரதி saja கார்டை கேட்டுள்ளார். பின் அவரிடம் கார்டை கொடுத்ததும் அந்த பையன் sajaவிடம் பல கேள்விகளைக் கேட்டு அவரது கவனத்தைத் திசை திருப்ப முயன்றிருக்கிறான். இந்நிலையில் saja PiNஐ இயந்திரத்தில் உள்ளிட்டதும் அந்த சாரதி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி சென்றிருக்கிறார். பின்னர் அவர் ஒரு கிரெடிட் கார்டை திருப்பிக் கொடுக்க அது தன்னுடைய கார்டு இல்லை என்பதை கவனித்துள்ளார் saja நடப்பது மோசடி என சட்டென புரிந்து கொண்ட உடனே தனது கிரெடிட் கார்டு ரத்து செய்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது. வேறு சில இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து இருக்கிறார்கள். உரிமம் பெற்ற டெக்சிகள் எல்லாமே பணம் வாங்கும். அப்படி யாராவது பணம் வாங்க மாட்டேன் என்றால் கவனமாக இருங்கள் என்று கூறும் marco ஒருவேளை யாராவது உங்களை ஏமாற்றி விட்டால் உடனடியாக உங்கள் வங்கிக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுங்கள். இதனையடுத்து ஒரு டெக்சி மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா அதில் ஏறாதீர்கள் அங்கிருந்து நடையை கட்டுங்கள் இப்படி செய்தால் உங்கள் பணமும் தப்பும் தேவையில்லா மன வேதனையும் தவிர்க்கலாம் என கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகம் ஒன்றில் saja இந்த எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்.