கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு படிக்கும் ஒரு மாணவர் மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மீது பாலியல் துன்புறுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் குற்றம் செய்யப்பட்ட மாணவர் மன்னிப்பு கடிதம் எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.