Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

சார் என்று சொல்ல வேண்டாம்: call me Rahul… புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி …!!

தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளின் பார்வை தேர்தல் நடைபெறும் மாநிலங்களை நோக்கி விழுந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மத்திய பட்ஜெட்டில் கூட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,  பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேசிய கட்சியின் தலைவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை குறிவைத்து தேர்தல் வியூகங்களையும், பிரச்சாரங்களையும் செய்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை செய்ய வந்துள்ளார். நேற்று பல்வேறு கிராமப்புறங்களுக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்ட ராகுல் காந்தி கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசினார்.

அப்போது கல்லூரி மாணவிகளிடம் என்னை யாரும் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்று அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். நீங்கள் ஆசிரியர்களை சார் என்று அழைக்கலாம், கல்லூரி முதல்வரை சார் என்று கூப்பிடுவீர்கள் ஆனால் என்னை ராகுல் என்று கூப்பிடவும் என்று தெரிவித்தார். இதையடுத்து மாணவிகளும் ராகுல்,  ராகுல் அண்ணா என்று கூப்பிடலாமா என்று கேட்டபோது, ராகுல் அண்ணா என்று கூப்பிட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |