போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள துலே மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிரவீன் விஸ்வநாத் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று பிரவீன் விஸ்வநாத் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று மாலை அவருடைய அறை நீண்ட நேரமாக பூட்டி இருந்துள்ளது.
இதனை பார்த்த சக ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை. இதனையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது பிரவீன் விஸ்நாத் தூக்கில் தொங்க நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அறையில் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.