குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனகத் நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று காலை 5 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டலில் சிங்கம் ஒன்று நுழைந்தது. வழித்தவறிய சிங்கம் ஹோட்டலின் நுழைவாயிலில் நுழைந்ததால் அதனை கண்ட காவலாளி தன்னை காப்பாற்றி கொள்ள கண்ணாடி அறைக்குள் பதுங்கி கொண்டதோடு ஹோட்டலில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்துள்ளார் .
சிங்கம் ஹோட்டலில் நுழைந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விடுதி வளாகங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் சுற்றித்திரிந்த சிங்கம் பின் கதவில் ஏறி குதித்து வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.