இந்த வருடம் ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 கோவில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும்.
இங்கு ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்த 4 தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது ‘சார் தாம் யாத்திரை’ என அழைக்கப்படுகின்றது.இந்நிலையில், இந்த ஆண்டு ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக உத்தரகாண்ட் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.