Categories
மாநில செய்திகள்

சார் நல்லா செக் பண்ணுங்க…. வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபர்…. அதிரடியில் சுங்கத்துறை அதிகாரிகள்….!!!!

வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அபுதாவியிலிருந்து தங்கத்தை கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அபுதாபியிலிருந்து வந்த பயணிகளை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் ஒரு நபர் தனது உடலில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 1.15   கிலோகிராம்   தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த  நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |