நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர். கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பத்திர பதிவிறக்கு அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று இரவு நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இரவு 12 மணி வரை நடந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத இந்த பணம் பத்திர பதிவிருக்காக லஞ்சமாக பெறப்பட்டதா உட்பட பல்வேறு கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பதிவாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.