Categories
சினிமா தமிழ் சினிமா

சார் புல் பிஸி…. “தனுஷின் அடுத்தடுத்த திட்டங்கள் இதுதான்”…. ரசிகர்களுக்கு ஹாப்பியோ ஹாப்பி….!!!

நடிகர் தனுஷின் தனுஷின் அடுத்தடுத்த திட்டங்கள் வெளியானதையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன் காதல் மனைவி ஐஸ்வர்யாவை கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்திருத்தனர். இதனையடுத்து தனுஷ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். தற்போது தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகின்றது. பிப்ரவரி 15-ல் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு செல்கிறார் தனுஷ். இத்திரைப்படத்திற்கு முன்பாக “வாத்தி” திரைப்படத்தில் நடித்தார் தனுஷ்.

தற்பொழுது “நானே வருவேன்” திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் மீண்டும் வாத்தி படத்திற்காக ஹைதராபாத்துக்கு செல்கின்றார். தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்து ஷூட்டிங்கில் நடித்து வந்தாலும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார். தனுஷை புரிந்துகொண்ட மற்றவர்கள் அவரை தொந்தரவு செய்யாமல் அவர் போக்கில் விட்டு விட்டார்களாம். இயக்குனர் ஐஸ்வர்யா “முசாபீர்” என்ற காதல் பாடலை இயக்கி இருக்கின்றார். இப்பாடலானது திரையுலகின் சூப்பர் ஸ்டாரின் மகளும் மும்பையை சேர்ந்த இளைஞனுக்கும் காதல் ஏற்படுவதை கொண்டதாகும். இப்பாடலை ஐஸ்வர்யா இயக்கியதோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் இருக்கிறார்.

Categories

Tech |