இங்கிலாந்தில் குற்றம் செய்யாத நபர் ஒருவர் தானாக வந்து சிறையில் வாழ விரும்புவதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்க்கஸ் ஹில்ஸ் என்று இடத்தை சேர்ந்த ஒரு நபர் தவறு எதுவும் செய்யாமல் “என்னை சிறையில் அடையுங்கள்” என்று பார்க்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து பார்க்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் டேரன் டைலர் என்பவர் கூறியுள்ளதாவது, “நேற்று பிற்பகலில் ஒரு நபர் வந்து காவல் நிலையத்திற்கு வந்து தற்போது இந்த மக்களுடன் வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை என்றும் சிறையில் அமைதியாக வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கில் வாழ்ந்த வாழ்க்கை எரிச்சலடைய செய்ததாகவும், மீதி இருக்கும் காலங்களிலாவது நிம்மதியாக வாழ விரும்புகிறேன். எனவே என்னை சிறையில் அடையுங்கள் என்று கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் தற்போது நான் வாழும் வாழ்க்கையை விட சிறை வாழ்க்கையை சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.