Categories
Uncategorized உலக செய்திகள்

சாலமோன் மீன்கள் வரத்து குறைவு…. ஆய்வில் தெரியவந்த உண்மை…. எச்சரித்த ஆய்வாளர்கள்….!!

ஸ்காட்லாந்து ஆறுகளிலிருந்து கிடைக்கும் சாலமோன் மீன்கள் புவியின் வெப்பநிலை காரணமாக குறைந்து வருவதால் ஸ்காட்லாந்து அரசு ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் புவி வெப்ப நிலையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வேளாண்மையில் தொடங்கி கடலில் வாழும் உயிரினங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி சந்தித்து வருகிறது. இதனால் ஸ்காட்லாந்து நாட்டின் ஆறுகளில் வாழும் சாலமோன் வகை மீன்கள் அழிந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.சாலமோன் மீன்கள் 10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வாழும் தன்மையுடையது. ஆனால் தற்போது 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை எதிர்கொண்டு வாழ்கிறது.

இதனால் 1950-ம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாந்து ஆறுகளிலிருந்து கிடைக்கும் சாலமோன் மீன்கள் 80 சதவீதம் குறைந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக கோடைகாலங்களில் ஏற்படும் வெப்ப நிலையைக் காட்டிலும் அதிக வெப்பநிலை ஏற்படுவதால் ஆறுகள் அதிக வெப்பநிலையை உள்வாங்குகின்றன. இதனால் சாலமோன் மீன்கள் உள்ளிட்ட பலவகை உயிர்கள் அழிந்து கொண்டே வருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஸ்காட்லாந்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 70 சதவீதம் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் வாழ்நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதனால் புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ஆறுகளின் வெப்பநிலையை குறைக்கும் வகையில் ஸ்காட்லாந்து அரசு ஆற்றங்கரையோரம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சாலமோன் மீன்பிடி ஆறுகளில் ஒன்றான அபெர்டீன்ஷெயரில் உள்ள டீஆறு மற்றும் அதன் முக்கிய துணை ஆறுகளில் கரையோரங்களில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளது. 10 லட்சம் மரக்கன்றுகளை 2035 ஆம் ஆண்டுக்குள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து அரசின் இந்த செயலினால் புவி வெப்பமயமாதலின் ஆபத்தை உணர்த்துவதாக சூழலியலாளர்கள் கூறுகின்றார்கள்.

Categories

Tech |