Categories
மாநில செய்திகள்

சாலைகளில் அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறினால்…? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறுபவர்கள் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசானையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது காற்று மாசு ஏற்படும் விதமாகவோ வாகனங்களை இயக்கினாலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வாகன பர்மிட் இன்றி சென்றாலோ தேவையில்லாமல் ஒழிப்பான் இயக்கி சத்தம் எழுப்பினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதனை அடுத்து பதிவின்றி வாகனம் இயக்கினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |