Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் – வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் சாலைகளில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உலா வருவதால் அவ்வழியே வாகனத்துடன் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் உள்ள செடி கொடிகள் பசுமை அடைந்துள்ளதுடன் நீர்நிலைகளும் நிறைந்து காணப்படுகின்றன.

வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியதால் அதிகளவில் வனவிலங்குகள் சாலை ஓரங்களில் நடமாடி வருகின்றன. குறிப்பாக ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து 80 சதவீதம் குறைந்த நிலையில் கூட்டம் கூட்டமாக யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் சாலை ஓரங்களில் உலா வருவது அதிகரித்துள்ளது. இதனை அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் கண்டு களித்து செல்கின்றனர்.

Categories

Tech |