கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே குளங்கள் உடைந்ததால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நாகர்கோவில்- பூதப்பாண்டி வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த காரணங்களால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும், நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் நெல்லைக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் இருந்து மயிலாடி அஞ்சுகிராமம் காவல்கிணறு வழித்தடத்தில் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.