Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால்…. ரூ.10,000 அபராதம்…. மாநகராட்சி அதிரடி…!!!

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் நோக்கதுடனும் திருச்சி மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் பொது சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடையின் உரிமையாளர்கள் 3 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தி கால்நடைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திருச்சி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |