Categories
மாநில செய்திகள்

சாலைகளுக்கு பாதிப்பு இல்லாத பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பட்டுக்கோட்டையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதால் கசடு கழிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பட்டுக்கோட்டை நகராட்சியில் மே மதத்திற்குள் கசடு கழிவு திட்டம் முழுமையாக நிறைவடையும். பட்டுக்கோட்டையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை அதிகரிக்கும் போது பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |