முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வகையிலும், மழைநீர் வடிந்து செல்ல ஏதுவான வகையிலும் திட்டமிட்டு சாலைகள் அனைத்தும் ரூ.7500 கோடியில் மேம்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 255 கி.மீ நான்கு வழிச்சாலைகள் ரூ.2123 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்றும், சாலைகளை பலப்படுத்தும் பணிக்கு ரூ.750 கோடியிலும், பாலங்கள் கட்டும் பணிக்கு ரூ.117 கோடியிலும் நடைபெறும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.