நாகை மாவட்டத்தில் சாலைப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், வட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இவர்களை சாலைப் பணியாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் ஜவகர் வரவேற்று பேசியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் தென்னரசு, ஜார்ஜ், நடராஜன் ஆகியோர் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்து சீர்காழி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் வழங்கவேண்டிய சம்பளத்தை உடனே கொடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பணி முறிவு காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்திட அரசாணை வரப்பட்ட நிலையில், இது வரை போராட்ட காலத்தில் உள்ள சம்பளத்தை வழங்கவில்லை எனவே அதை உடனே வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பிச்சை பிள்ளை, ஜவஹர், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் முடிவில் முருகேசன் நன்றி தெரிவித்துள்ளார்.