சாலையின் குறுக்கே படுத்து கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டிகைநத்தம் செல்லும் கிராம சாலையின் குறுக்கே மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.