Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையின் குறுக்கே வந்த குரங்கு…. பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ… படுகாயமடைந்த 8 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னாலூரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லோகநாதன் உறவினர்களான பாக்கியலட்சுமி, சத்தியா, பிரியா, ராணி, புகழரசி, மரியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் செஞ்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார் இந்த ஆட்டோவை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் அருகே சென்றபோது குரங்கு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் முருகன் பிடித்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த முருகன் உள்பட 8 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |