கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற வாகனத்தை, பேருந்து ஓட்டுநர் முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து சென்டர் மீடியனுக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மீடியனில் இருந்த செடிகளை சேதப்படுத்தியவாறு பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனை பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.