Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே நின்ற காட்டெருமைகள்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலைகளில் உலா வருகிறது. நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் முகாமிட்ட காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் காட்டெருமைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த வழியாக காட்டெருமைகள் சென்ற பிறகு போக்குவரத்து சீரானது.

Categories

Tech |