இறந்து கிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் அமைந்துள்ள 2- வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றிகள் இறந்த சிறுத்தையின் உடலை ஆக்ரோஷத்துடன் கடித்து குதறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டிவிட்டு சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வாகன ஓட்டிகள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் எனவும் விலங்கு வேட்டை மற்றும் மரகடத்தல் போன்றவற்றை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.