Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமை” அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமையை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி  காட்டுக்குள் விரட்டி அடித்துள்ளனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி  வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அண்ணாசாலை பகுதியில் காட்டெருமை ஒன்று கம்பீரமாக நடந்து   வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு  ஓடினர். இதனையடுத்து அவர்கள்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டெருமையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.

ஆனால் காட்டெருமை  அருகே அமைந்துள்ள காவல்நிலைய  வளாகத்திற்குள்  நுழைந்துவிட்டது. இந்நிலையில்  காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டெருமையை அருகில் இருந்து தனியார் தோட்டத்திற்குள் விரட்டியுள்ளனர். மேலும் நகருக்குள்  காட்டெருமைகள் நுழைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |