Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையில் கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள எஸ்.கடமங்கலம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சை, முருகேசன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |