கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தவளகுப்பம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது இந்த காரில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர்களான நிக்கின்(25), ரஷிக்கா(20) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள கரிக்கன்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று போன் பேசிக் கொண்டிருந்த நந்தகுமார் என்பவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.