Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடாசாமி- விஜயலட்சுமி தம்பதியினர் பட்டுப்புடை வாங்குவதற்காக காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சீனிவாசன், அவரது மனைவி பார்வதி, சுப்பம்மா, சரஸ்வதி, சீனிவாச ரெட்டி, அவரது மனைவி கீர்த்தனா ஆகியோரும் இருந்துள்ளனர். அந்த காரை பீமாசாரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கீர்த்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |