Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. சேலத்தில் கோர விபத்து…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தூர் சாவடிப்பாளையம் பகுதியில் அப்புசாமி(58) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் பழனியம்மாள் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் பழனியம்மாளுக்கு அடையாள கல் நடும் துக்க நிகழ்ச்சிக்கு அப்புசாமி தனது 28 உறவினர்களுடன் சரக்கு வேனில் திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த சரக்கு வேனை துரைசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி அருகே சந்தன மில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 30 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |