சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையவயல் கிராமத்தில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பழனியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெருநாவலூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பழனியப்பன் ஒட்டி வந்த சரக்கு வேன் மீது மற்றொரு சரக்கு வேன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்ததால் வசந்தா, சிந்தாமணி, பூங்கொடி, அஞ்சம்மாள், பார்வதி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.