சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையில் இருக்கும் வெங்களமேடு பகுதிக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெங்களமேடு அருகே சென்ற போது திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.