சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் போக்குவரத்து போலீசில் மாரிமுத்து என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே போக்குவரத்து பிரிவு போலீசில் மகாவீரன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு மகாவீரன் போலீஸ் ஜீப்பில் மாரிமுத்துவை அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அவர்கள் திருமுல்லைவாயில் கல்லறை நிறுத்தம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி முத்துவின் தொண்டையில் குத்தியது. மகாவீரனுக்கும் இடது தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.