Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. பரிதாபமாக இறந்த மாடு…. ஆறாக ஓடிய டீசலால் பரபரப்பு…!!

டேங்கர் லாரி மோதிய விபத்தில் பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ராணிப்பேட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது டேங்கர் லாரி பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பசுமாடு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது.

மேலும் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இந்நிலையில் லாரியிலிருந்து டீசல் வெளியேறி சாலையில் ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விபத்துக்குள்ளான லாரியின் மீது ரசாயன நுரை கலவையை தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி மீட்கப்பட்டது.

Categories

Tech |