சாலையில் தடுப்புசுவர் மீது மோதி அரசு பேருந்து கவிழ்ந்ததில் 40 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
திருச்சியில் மாவட்டத்தில் இருந்த ஈரோடுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அதிகாலை 4 மணி அளவில் பள்ளிபளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வைத்து திடீரென அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் பயணிகள் 40 பேரையும் பாதுகாப்பாக மீட்டு மற்றொரு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர். இதற்குப்பின் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த அரசு பேருந்தை அப்புறபடுத்தி இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.