லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கேரள மாநிலத்திலிருந்து ரப்பர் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- தென்காசி சாலையில் நவநீதகிருஷ்ணபுரம் அருகே சென்ற போது ஜல்லியால் போடப்பட்ட சாலையில் இருந்து தார் சாலைக்கு தர்மன் லாரியை திருப்ப முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்மன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர்.