கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பேப்பர் அட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி குமார் படுகாயமடைந்தார் இதனை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.