Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு லாரி நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனரான ராஜேஸ்வரன் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேல்முருகன் உள்பட 2 பேரும் காயமடைந்தனர்.

இது பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய இரண்டு பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து மீட்பு குழுவினரும், போலீசாரும் இணைந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |