கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமானது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து ஒரு லட்சம் கோடி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை பெட்டியில் அடுக்கி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கிளீனரான ஜெயராம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணுவாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி வளைவில் திரும்ப முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். ஆனால் 50 ஆயிரம் கோழி முட்டைகள் உடைந்து நாசமானது. இதனையடுத்து மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு உடையாத மூட்டைகளை ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.