கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கிடாரம் கிராமத்தில் தேங்காய் நார் கயிறு செய்யும் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஒரு வேனில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த வேனை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் காடுவெட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் சத்தியா, சந்திரா, மஞ்சுளா உட்பட 8 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து காயம் அடைந்த 8 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.