கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய பக்தர்கள் வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் இருந்து பக்தர்கள் 21 பேர் ஒரு வேனின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தேனி பொய்மையகவுண்டன்பட்டியில் உள்ள சாலை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து வேனில் இருந்த பக்தர்களில் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக வேனில் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வேனில் இருந்த போடியை சேர்ந்த ராணி, பாண்டியம்மாள், கவிதா சின்னசாமி உள்பட 21 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை தேனி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற அல்லிநகரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.