Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த 8 பவுன் நகை…. வாலிபர்களின் செயல்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் அரசு வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு அருகே சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பாலாஜி, லோகேஸ்வரன், மணி என்ற 3  பேர் அந்த மணிபர்சை  எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் 8  பவுன் தங்க நகை  இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களின் நேர்மையை காவல்துறையினர் மிகவும் பாராட்டியுள்ளனர். மேலும் நகையை  பறிகொடுத்த உரிமையாளர் அதன் ஆவணங்களை காட்டி நகை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |