சாலையில் பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞருக்கு வீடு தேடி சென்று அபராதம் விதிக்கப்பட்டது
கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டு வழிவிடாமல் இருந்துள்ளார். பேருந்தின் ஓட்டுனர் ஹார்ன் அடித்தும் இளைஞர் அதனை கண்டுகொள்ளாமல் சாகசம் செய்வதுபோல் பைக்கை ஓட்டி கொண்டிருந்தார் இதனை பேருந்தில் இருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
காணொளி வைரலாகி அதனை பார்த்த கண்ணூர் ஆர்டிஓ அதிகாரிகள் நேரடியாக இளைஞரின் வீட்டைத் தேடிச் சென்றனர். அங்கு தலைக்கவசம் அணியாது, விபத்து ஏற்படுவது போன்று வாகனம் ஓட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் இளைஞர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர். இதனை அறிந்த இணையவாசிகள் ரொம்ப ஆட்டம் போட்டா இப்படித்தான் என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.