தீப்பற்றி எரிந்த காரில் இருந்து தப்பித்த பெண் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் கார் பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காரை நிறுத்தி அவசரமாக வெளியில் இறங்கி தப்பிய அந்தப் பெண் அருகில் இருந்த பாலத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து விட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவி குழு அந்தப்பெண்ணின் முதுகெலும்பு உடைந்து இருப்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண் பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக லண்டனைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 2.40 மணி அளவில் நடந்த இச்சம்பவம் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.