Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து…. “திடீர் தீ விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…!!!!

தனியார் கல்லூரியின் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் பயிலும் 35 மாணவர்களை கல்லூரி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது தாம்பரம் மதுரவாயல் இடையேயான பைபாஸில் பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் டிரைவர் உடனடியாக பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். அப்பொழுது பஸ் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பிப்பதை கண்டு பஸ்ஸில் இருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு உடனடியாக வெளியேறினர்.

சிறிது நேரத்திலேயே பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தார்கள். புகை வந்த உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த பொழுது விபத்துக்குள்ளான இந்த பேருந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக ஆர்டிஓ வளாகத்தில் வாகன புதுப்பிப்பு சான்று பெறப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |