Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற இளம்பெண்… காரில் ஏற்றிய 30வயது இளைஞர்… பதற வைத்த கனடா சம்பவம் …!!

மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள Halifox ல், சம்பவத்தன்று சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் வந்து இறங்கி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பிய இளம்பெண், தனக்கு தெரிந்த நபரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் விசாரித்த காவல்துறையினர், காரில் வந்த மர்ம நபர் கருப்பு கோட், கண்ணாடி மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நபர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |