முதியவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த முதியவர் Jose Migual. இவர் சில மாதங்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்ற 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அந்த முதியவர் சிறுமியின் பக்கத்தில் சென்று அவரை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனவே இது குறித்த புகாரின் பேரில் முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட Jose அடுத்த மாதம் 3ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான முதியவரை யாருக்கும் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.