விழுப்புரம் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டதில் உள்ள புத்தா முண்டகபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமூர்த்தி. 30 வயதுடைய இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். செல்வமூர்த்தி ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார். ந.வ.27-ம் தேதி இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுவுள்ளார். அப்பொழுது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று அவர் மீது மோதி உள்ளது.
அதில் பலத்த காயம் அடைந்த செல்வமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இச் சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று செல்வமூர்த்தியின் உடலை கைப்பற்றினர். பின்பு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.