கனடா சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது இது குறித்த முக்கிய சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் ரொறன்ரோவில் கடந்த 1 ஆம் தேதி நேர்ந்துள்ளது. அதாவது அன்றைய தினம் பே தெருவுக்கு வருமாறு காவல்துறையினருக்கு அவசர தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 33 வயதான பெண் தனியாக நடந்து சென்றபோது ஒரு நபர் அவரை அணுகியுள்ளார். அதன்பின் அப்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். அந்நேரத்தில் அந்த பெண்ணுக்கு உதவ வந்த ஆண் ஒருவரையும் தாக்கியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சி.சி.டி.வி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அந்த நபரை அடையாளம் கண்டால் உடனே தங்களை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.